Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆறரை அடி 'வாழைத்தார்' விளைவித்து பொன்ராஜ் எம்.ஏ சாதனை

ஆறரை அடி உயரத்துக்கு வாழைத்தார் விளைவித்து திருச்சியை சேர்ந்த பொன்ராஜ் என்ற விவசாயி சாதித்துள்ளார். இவர் எம்.ஏ படித்தவர்.

திருச்சி  மாவட்டம் லால்குடி அருகே முக்தியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்ராஜ். இவர் தனது நிலத்தில் கற்பூர வள்ளி- வெள்ளைப்பூவன் வாழைப்பழ ரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட ஜி9 ரக வாழை பயிரிட்டிருந்தார். தற்போது, இவை விளைச்சல் கண்டுள்ளது. வாழைத்தார் ஒவ்வொன்றும் 80 கிலோ எடையில் ஆறரை அடி உயரத்துக்கு மெகா சைஸில் விளைந்துள்ளன. ஒரு வாழைத்தாரில் 35 சீப்புகளுடன் 700 காய்கள் இருந்தன. திருச்சி காந்தி மார்க்கெட்டில் இந்த வாழைத்தார் ரூ.1,100-க்கு ஏலம் போனது. பிரமாண்ட வாழைத்தாரை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். கடந்த வருடம் பொன்ராஜ், ஆறு அடி உயர வழைத்தார் விளைவித்திருந்தார்.

இது குறித்து விவசாயி பொன்ராஜ் கூறுகையில்,''எம்.ஏ. படித்து விட்டு வேலையெல்லாம் தேடவில்லை. 20 வருசமா விவசாயம்தான் பார்த்துட்டு இருக்கேன். திசுகல்ச்சர் முறையில் இந்த ரக விதை உருவாக்கப்பட்டது. பரிச்சாத்திய முறையில் 20 விதைகள் வாங்கி பயிரிட்டேன். அனைத்து வாழைகளுமே நன்கு வளர்ந்து வாழைத்தாரை ஈன்றன. இந்த ரகம் விளைவிக்க 12 மாதங்கள் ஆகும்'' என்கிறார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close