Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மெரினா பீச்சுக்கு விசிட் அடித்த ஸ்டாலின் தம்பதி!

எவ்வளவு பெரிய மனிதராகி விட்டாலும்... வயதே ஆகி விட்டாலும் மனசுக்குள் சின்ன சின்ன ஆசைகள் இருக்கத்தான் செய்யும். சாமானியன் வரை குடியரசுத் தலைவர் வரை இந்த நியாயம் மட்டும் பொதுவானது. ஆர்.கே நகர் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்தே தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் செம பிசி. தேர்தல் ரத்து செய்யப்பட்டதையடுத்து தற்போது ஸ்டாலினுக்கும் சற்று ஓய்வு கிடைத்துள்ளது. 

வழக்கமாக வாரத்துக்கு ஒரு முறை ஸ்டாலின் தனது பேரக்குழந்தைகளுடன் மெரினா பீச்சுக்கு செல்வது வழக்கம். ஆர்.கே. நகர் பிரசாரம் காரணமாக சில வாரங்களாக பேரக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு மெரினா பீச் செல்ல இயலவில்லை. பிரசாரம் ரத்தானதையடுத்து பிசியில் இருந்து விடுபட்ட ஸ்டாலின், நேற்று இரவு பேரக்குழந்தைகளை அழைத்துக் கொண்டு மெரினா பீச் சென்றார்.  சுற்று ராட்டினத்தில் பேரக் குழந்தைகள் சுற்றி வர, அதனை ஸ்டாலின் - துர்கா தம்பதி ரசிக்கின்றனர். இந்த புகைப்படம் தற்போது பேஸ்புக்கில் வலம் வருகிறது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close