Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஸ்மார்ட் ரேஷன் கார்டு குறுந்தகவலை அழிக்க வேண்டாம்' - மதுரை ஆட்சியர்

madurai collector

மதுரை மாவட்ட மக்களுக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கல் முறை குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் எடுத்துரைத்தார். அதுபற்றி பேசிய அவர், '2வது கட்டமாக மதுரை வடக்கு தாலுகாவிற்கு 27,248, மத்திக்கு 16,821, மேற்கிற்கு 24,969, கிழக்கிற்கு 19,438, மேலூருக்கு 14,448, வாடிப்பட்டிக்கு 15,531, உசிலம்பட்டிக்கு 13,116, திருமங்கலத்திற்கு 17,740, பேரையூருக்கு 11,538  என ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 849 ஸ்மார்ட் கார்டுகள் வந்துள்ளன. அலைபேசியில் ஓ.டி.பி., எண் வந்த நுகர்வோர் ரேஷன்கார்டு, ஆதார் அட்டை, குறுந்தகவல் வந்த அலைபேசியுடன் சென்று ஒப்புதல் பட்டியலில் கையெழுத்திட்டு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை பெறலாம்' என்றார்.

மேலும், 'குறுந்தகவல் வந்த ஏழு நாட்களுக்குள் ஸ்மார்ட் கார்டு பெற்றுவிட வேண்டும். இதற்காக தனிப்பட்ட கட்டணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை. ஸ்மார்ட் ரேஷன் கார்டு தொடர்பாக அலைபேசிக்கு வரும் குறுந்தகவலை ரேஷன் கார்டுதாரர்கள் அழிக்க வேண்டாம்' என கூறியுள்ளார்.

ஈ.ஜெ. நந்தகுமார்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close