Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அம்பேத்கர் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மரியாதை

அம்பேத்கரின் 127-வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு  மரியாதை செலுத்தினார் ஓ.பன்னீர் செல்வம். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு ஓ.பி.எஸ், மதுசூதனன், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இன்று 'சட்ட மேதை' அம்பேத்கரின் 127 -வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், பட்டியல் இனத்தவரின் விடுதலைக்கும் போராடிய அம்பேத்கரின் பிறந்தநாளை ஒட்டி தமிழகத்தின் முக்கிய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் ஓ.பன்னீர் செல்வம் மரியாதை செலுத்தினார். அவருடன் மற்ற கழக நிர்வாகிகளும் இந்நிகழ்வில் பங்கேற்றனர். கழக அவைத்தலைவர் மதுசூதனன், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோரும் அம்பேத்கர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இவர்களுக்கு முன்னர் அதிமுக அம்மா அணியை சேர்ந்த டிடிவி தினகரன், முதலைமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் உள்ளிட்டோரும் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close