Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விவசாயிகளை கண்டுகொள்ளாத தமிழக அரசு- குற்றஞ்சாட்டும் உச்சநீதிமன்றம்

வறட்சியால் பாதிக்கப்பட்டு வரும் விவசாயிகளை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்து வருவதாக தமிழக அரசின் மீது உச்சநீதிமன்றம் குற்றம் சுமத்தியுள்ளது.

உச்சநீதிமன்றம்


வறட்சியால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளைக் காக்க உரிய நடவடிக்கை எடுக்காமல், தமிழக அரசு அலட்சியமாக செயல்பட்டு வருவதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மக்களைக் காக்க வேண்டிய ஒரு மாநில அரசு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கி உதவாமல் இருப்பது எந்தவொரு அரசுக்கும் அழகல்ல என்றும் தமிழக அரசு மீது தொடர் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது உச்சநீதி மன்றம்.


தொடர் தற்கொலைகள், பொருளாதார வீழ்ச்சி என வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, இந்தக் காலத்தை இயற்கை பேரிடர் காலமாக அறிவித்து தகுந்த நிவாரண உதவிகளை விரைந்து வழங்க வேண்டுமெனவும், இதற்கு மேல் தமிழக அரசு மவுனம் காப்பது சரியல்ல என்றும் உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close