Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிற்பி நந்தகோபால் காலமானார்

சிற்பியும், சோழமண்டலக் கலைஞர்களின்  உறுப்பினருமான நந்தகோபால் காலமானார்.

Nandagopal


எஸ். நந்தகோபால், கடந்த 1946-ம் ஆண்டு பெங்களூரில் பிறந்தார். 1965-ம் ஆண்டு, சோழமண்டலத்தில் உறுப்பினரானார்.  1966-ம் ஆண்டு சென்னை லயோலா கல்லூரியில் இயற்பியல் துறையில் பட்டம் பெற்றார். 1970 மற்றும் 1978-ம் ஆண்டு டெல்லி-லலித் கலா அகாடமியின் தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார்.  1978-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற நான்காவது சர்வதேச சிற்பப் போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்றார்.


இதையடுத்து, கடந்த, 1980-ம் ஆண்டு  பட்டியாலாவில் உள்ள பஞ்சாபி அருங்காட்சியகத்தில்  நடைபெற்ற, இந்தியாவின் முதல் சர்வதேச சிற்பிகளுக்கான முகாமில் கலந்துகொண்டார். 1985-ம் ஆண்டு ஐ.சி.சி.ஆர் உதவியுடன் யூகோஸ்லாவியாவுக்கு சென்று வந்தார். இதைத்தொடர்ந்து கடந்த, 1992 மற்றும் 2002-ம் ஆண்டுகளில், டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்திற்கு பர்ச்சேஸ் கமிட்டியில் பணியாற்றவும், 1998-ம் ஆண்டு ஆலோசகராக பணியாற்றவும் இந்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


பின், கடந்த 2002-ம் ஆண்டு சிற்பங்களுக்கான தி ஜிண்டால் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் விருது பெற்றார். 2013ம் ஆண்டு சென்னை- ஹயட் ரீஜென்ஸியில் 23 அடி உயர காப்பர் மற்றும் வெண்கலத்தினாலான சிலையை படைத்தார். 

இந்நிலையில், இவருக்கு, வெள்ளிக்கிழமை கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது. இதனால், சென்னை கிழக்கு கடற்கரை சாலை சோழமண்டல கலைஞர்களின் கிராமத்தில் உள்ள, தனது வீட்டிலேயே காலமானார். அவருக்கு வயது 71. நந்தகோபாலுக்கு ஒரு மகள் உள்ளார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close