Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கணவரை வீட்டை விட்டு வெளியேற்றிய தீபா!

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் தலைவர் தீபா, தன் கணவருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவரை வீட்டைவிட்டு வெளியேற்றியுள்ளார். 

 

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை நிறுவனர் சரண்யா என்பவரும், செயலாளராக தீபாவின் கார் ஓட்டுநர் ஏ.வி.ராஜாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குப் பதவி அளித்ததற்கு, தீபாவின் கணவர் மாதவன் கடும் எதிர்ப்புத் தெரிவித்துவந்தாராம். 'தான் கூறும் நபர்களுக்கே கட்சியில் பதவி கொடுக்க வேண்டும் ' என்று தீபாவுக்கு மாதவன் நெருக்கடி கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் தீபா, மாதவனை ஓரம்கட்டினார். ஆர்.கே. நகர்த் தொகுதியில் போட்டியிட்ட தீபா, தனது வேட்பு மனுவில் கணவர் பெயரைக்கூட குறிப்பிடவில்லை. 

பின்னர், மாதவன் தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்தார். தீயவர்கள் தீபாவுக்குத் துணையாக இருக்கிறார்கள் என்பது மாதவன் வைக்கும் குற்றச்சாட்டு. இந்த நிலையில்,  தியாகராயர் நகரில் உள்ள தீபா வீட்டுக்கு நேற்று தனது ஆதரவாளர்களுடன் வந்த மாதவன், தீபாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 'எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்ளலாம்' என பதில் கூறிய தீபா, மாதவனை வீட்டை விட்டு வெளியேற்றி , அவரை மீண்டும் வீட்டுக்குள் விடவேண்டாம் என காவலாளிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதனால், தீபா ஆதரவாளர்களுக்கும் மாதவன் ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பும் கையில் கிடைத்ததைக் கொண்டு தாக்கிக்கொண்டனர். சம்பவம் பற்றி கேள்விப்பட்ட போலீசார், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர். 
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close