Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மகாதேவன் மரணம்! பரோலில் வருகிறார் சசிகலா?

தன் அண்ணன் வினோதகனின் மூத்த மகன் மகாதேவன், மாரடைப்பால் மரணம் அடைந்ததையடுத்து, இவரது இறுதிச்சடங்கில் சசிகலா கலந்துகொள்வார் எனக் கூறப்படுகிறது. சிறையில் இருந்து பரோலில் வருவதற்கான ஏற்பாடுகளை சசிகலா தரப்பினர் செய்து வருகின்றனர்.

அ.தி.மு.க அம்மா கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா. இவரின் அண்ணன் வினோதகனின் மூத்த மகன் மகாதேவன். இவர், ஜெயலலிதா பேரவையின் மாநிலச் செயலாளராக இருந்துவந்தார். இன்று காலை கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் கோயிலுக்கு மகாதேவன் சென்றுள்ளார். அப்போது, திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். போகும் வழியில் அவர் உயிரிழந்தார். அவரது உடல், தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

மகாதேவன்மீது சசிகலாவுக்கு மிகுந்த அன்பு உண்டு. அவரது இறப்பு குறித்து பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சிறைத்துறை அதிகாரிகளிடம், பரோலில் செல்வதற்கான நடைமுறைகளை சசிகலா கேட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அப்போது, சசிகலாவை பரோலில் விடுவது குறித்து சிறைத்துறை நிர்வாகம் முடிவுசெய்யும் எனத் தெரிகிறது.

இதனிடையே, மகாதேவன் மரணம் குறித்துத் தகவல் அறிந்த, தாய்மாமனும் ‘அ.தி.மு.க அம்மா’ கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான டி.டி.வி.தினகரன், தஞ்சாவூர் செல்கிறார். மருத்துவமனையில் உள்ள அவரது உடலுக்கு டி.டி.வி.தினகரன் அஞ்சலி செலுத்த உள்ளார். இதையடுத்து, அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படுகிறது.

மகாதேவனுக்கு, இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்துவருகிறார். இளைய மகளும் படித்துக்கொண்டிருக்கிறார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close