Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நெடுவாசலில் நான்காவது நாளாக தொடரும் போராட்டம்!

ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிடக்கோரி, புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராம விவசாயிகள், நான்காவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் வாயு எடுக்க, மத்திய அரசு முடிவு செய்திருந்தது.  அதை எதிர்த்து, பிப்ரவரி மாதம் நெடுவாசலில் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

hydro carbon protest

25 நாள்கள் நீடித்த அந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான கிராம மக்கள் கலந்துகொண்டனர். தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். பின்னர், 'ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நெடுவாசலில் தொடங்க மாட்டோம்' என்று மத்திய, மாநில அரசுகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால், கடந்த சில வாரங்களுக்கு முன், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில், நாடு முழுவதும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தில், நெடுவாசல் கிராமத்திலும் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது. மத்திய அரசின் இந்தச் செயலுக்கு தமிழ்நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன. அதையடுத்து, 'தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்' என்று நெடுவாசல் மீட்புக் குழுவினர் அறிவித்தனர். இந்த நிலையில், கடந்த நான்கு தினங்களாக நெடுவாசல் கிராமத்தில் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

படம் : ம.அரவிந்த்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close