Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழக விவசாயிகள் தற்கொலை விவரம்- அதிரவைத்த ஆர்டிஐ பதில்!

'தமிழகம் முழுவதும் வறட்சியின் காரணமாக தற்கொலைசெய்துகொண்ட 82 விவசாயிகளின் குடும்பங்களுக்கு, 3 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது' என்று தமிழ்நாடு வேளாண்துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.
 

farmers

கடந்த வருடம், வடகிழக்குப் பருவ மழை பொய்த்ததன் காரணமாக, தமிழகத்தில் கடுமையான வறட்சி ஏற்பட்டது. இதன்காரணமாக தமிழகம் முழுவதும் விவசாயம் பாதிக்கப்பட்டது. விவசாயிகள் பெரிய அளவிலான நஷ்டத்தைச் சந்திக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் ஏராளமான விவசாயிகள் அதிர்ச்சியிலும், தற்கொலைசெய்துகொண்டும் உயிரிழக்க நேரிட்டது.

இந்த நிலையில், புலியூர் நாகராஜன் என்பவர், வறட்சி நிவாரணம் குறித்தும் விவசாயிகள் உயிரிழப்பு குறித்தும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்மூலம் விளக்கம் கேட்டார். இதற்கு, தமிழக வேளாண்துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தி பதில் அளித்துள்ளார். அதில், 'தமிழகம் முழுவதும் பல்வேறு காரணங்களால் தற்கொலைசெய்துகொண்ட 82 விவசாயிகளுக்கு, 3 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டது. விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணத் தொகை 2,049 கோடி ரூபாய் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. அந்தத் தொகை, நேரடியாக அவர்களுடைய வங்கிக் கணக்கில் செலுத்த அரசு ஏற்பாடுசெய்துள்ளது. குறுகிய கால கடன்களைத் திருப்பிச்செலுத்த, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது' என்று கூறப்பட்டுள்ளது.

தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டபோது 17 விவசாயிகள் மட்டுமே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close