Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பரோலில் சசிகலா வருவாரா? டி.டி.வி.தினகரன் பதில்

ttv Dinakaran

'சசிகலா விரும்பினால், அவர் பரோலில் வருவதற்கான ஏற்பாடு செய்யப்படும்' என்று அ.தி.மு.க அம்மா கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

அ.தி.மு.க அம்மா கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவின் அண்ணன் வினோதகனின் மகன் மகாதேவன், இன்று காலை கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் கோயிலுக்குச் சென்றார். அப்போது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் உடனடியாக தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். அவரது உடல், தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மகாதேவனின் தாய்மாமன் டி.டி.வி.தினகரன், தஞ்சாவூர் விரைந்துள்ளார். மருத்துவமனையில் உள்ள மகாதேவன் உடலுக்கு அவர் அஞ்சலிசெலுத்த உள்ளார்.

இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரனிடம், மகாதேவன் இறுதிச்சடங்கில் பங்கேற்க சசிகலா வருவாரா என்று கேட்டனர். அதற்குப் பதில் அளித்த அவர், 'சசிகலா விரும்பினால் அவர் பரோலில் வருவதற்கான ஏற்பாடு செய்யப்படும்'. மகாதேவன் மரணம் குறித்து சிறையில் உள்ள சசிகலாவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close