Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தாலியறுத்து; ஒப்பாரி வைத்து தமிழக விவசாயிகள் நூதனப் போராட்டம்

டெல்லி ஜந்தர் மந்தரில் 33-வது நாளாக போராடி வரும்  தமிழக விவசாயிகள் இன்று தாலியறுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

farmers protest

காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும், பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெல்லி ஜந்தர்மந்தரில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் விவசாயிகள் வித்தியாசமான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மண்டை ஓடு, மண் சட்டி, தூக்குக் கயிறு, எலிக் கறி, பாம்புக் கறி உள்ளிட்டவற்றை வைத்து  போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள், திடீரென்று நிர்வாணப் போராட்டம் நடத்தினர்.   இந்நிலையில் 33-வது நாளான இன்று, தமிழக விவசாயிகள் தாலியறுத்து, ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இதனிடையே, டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. கோவையில் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், புதுக்கோட்டை நெடுவாசலில் அமையவுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அனைத்து இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் ரயில் முற்றுகையிடும் போராட்டமும், பாடை கட்டும் போராட்டமும் நடைபெற்றது.

இதே போன்று தஞ்சாவூரிலும் விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின்போது தி.மு.க.வினர் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்தபோது, அரசியல் கட்சிகள் வெளியேற வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து, மாணவர்களுக்கும் தி.மு.க.வினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த உண்ணாவிரதப் போராட்டம் நாளையும் தொடரும் என்று மாணவர்கள் அறிவித்துள்ளனர். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close