Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெ. அண்ணன் மகள் தீபா வீட்டில் பரபரப்பு!

ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா வீட்டில் அவரது ஆதரவாளர்களுக்கும், கணவர் மாதவன் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவர் காயம் அடைந்தார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க மூன்றாக பிரிந்தது. சசிகலா தலைமையில் ஓர் அணியும், பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் அணியும், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா தலைமையில் ஓர் அணியும் உருவானது. எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையைத் தொடங்கினார் தீபா. இந்த பேரவைக்கு நிர்வாகிகள் நியமிப்பத்தில் தீபாவுக்கும், அவரது கணவர் மாதவனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, ஜெயலலிதா சமாதிக்குச் சென்ற மாதவன், புதிய கட்சியைத் தொடங்கப்போவதாக அறிவித்தார். இதனால் கணவன்- மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு மேலும் அதிகரித்தது. இரண்டு பேரும் பிரிந்து வாழ்கின்றனர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட தீபாவுக்கு ஆதரவாக மாதவன் பிரசாரம் செய்யவில்லை. தனியொருவராக தீபா பிரசாரம் செய்தார். இதனிடையே பணப்பட்டுவாடா காரணமாக இடைத்தேர்தலும் ரத்து செய்யப்பட்டுவிட்டது. இந்நிலையில், சென்னை தி.நகரில் உள்ள தீபா வீட்டுக்கு நேற்று மாதவன் திடீரென வந்தார். அப்போது, தீபாவுக்கும், மாதவனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வீட்டுக்காவலாளிகளால் மாதவன் வெளியேற்றப்பட்டார். அப்போது, இரண்டு தரப்பு ஆதரவாளர்களும் தண்ணீர் பாட்டில், கற்களை வீசி மோதிக்கொண்டனர்.

இந்நிலையில், சென்னை தி.நகரில் உள்ள தீபா வீட்டுக்கு மாதவன் ஆதரவாளர்கள் இன்று பிற்பகலில் வந்துள்ளனர். அப்போது, இரண்டு தரப்பு ஆதரவாளர்களும் பயங்கரமாக மோதிக்கொண்டனர். இதில் ஒருவர் காயம் அடைந்தார். இதையடுத்து தீபா வீடு அருகே காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close