Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாநில அரசுகளின் அதிகாரங்களை மத்திய அரசு பறிக்கக் கூடாது - மு.க.ஸ்டாலின்

மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பறித்து பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபடக் கூடாது என்று தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசியலமைப்பு அதிகாரம் அளிக்கும் வகையில் பா.ஜ.க அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது. இது தொடர்பான மசோதா கடந்த சில தினங்களுக்கு முன் மக்களவையில் நிறைவேறியது. இந்த சட்டத் திருத்தத்தின்படி பிற்படுத்தப்பட்டோர் பிரிவை குடியரசுத் தலைவர் உறுதி செய்யும்படி உள்ளது. இந்த சட்டத் திருத்தத்துக்கு தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை அறிவிக்கும் பொறுப்போ, அதில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினரை சேர்க்கும் பொறுப்போ மாநில அரசுக்கு மட்டுமே இருக்கிறது. இத்தகைய சூழலில், தற்போது பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை குடியரசுத் தலைவர் தயாரிப்பார் என்று கூறுவது மாநில அரசுகளின் அதிகாரத்தை மத்திய அரசு அபகரித்துக் கொள்ளும் செயலாகும். பிற்படுத்தப்பட்டோருக்கு புதிதாக மத்திய அரசு ஒரு பட்டியலை தயாரிக்கப் போகிறது என்றால், தற்போது மாநிலங்களில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல்களின் கதி என்ன? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மாநில அரசுகளின் அதிகாரங்களை ஒரே சட்டத்தின் மூலம் பறித்துக் கொள்ளும் முயற்சியில் ஆளும் அரசு ஈடுபடக்கூடாது' என்று குறிப்பிட்டுள்ளார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close