Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'அழைப்பை எதிர்பார்க்கவில்லை': ஸ்டாலினுக்கு தமிழிசை பதிலடி

தி.மு.க  தலைமையில் சென்னையில் இன்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்து உள்ளார். மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், பெருந்தலைவர் மக்கள் கட்சி  ஆகியவை இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதாக அறிவித்து உள்ளன. பா.ம.க நிறுவனர் ராமதாஸை தைலாபுரம் இல்லத்தில் சந்தித்து தி.மு.க நிர்வாகிகள் நேரில் அழைப்பு விடுத்தனர். பி.ஜே.பி-க்கு அழைப்பு விடுக்கவில்லை என்று தி.மு.க வெளிப்படையாக கூறி இருந்தது. அதற்கு பி.ஜே.பி மாநில தலைவர் தமிழிசை பதில் அளித்துள்ளார். 

tamilisai soundararajan

ஒடிசா செல்லும் வழியில் , சென்னை விமான நிலையத்தில் தமிழிசை  கூறுகையில், ''தி.மு.க. நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்துக்கான அழைப்பை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த தி.மு.க-வுக்கு  தார்மீக உரிமை இல்லை. விவசாயிகள் இவ்வளவு பிரச்னைகளை சந்திக்கிறார்கள் என்றால் தமிழகத்தில் அதிக நாட்கள் ஆண்ட தி.மு.க.வும், அ.தி.மு.க-வும் தான்  காரணம். தொலைநோக்கு திட்டம் இல்லாமல் விவசாயாத்தை சாகடித்து விட்டனர். இவர்களின் 50 ஆண்டு ஆட்சியில் தமிழ்நாடு குட்டிச்சுவராகி விட்டது. குறுகிய கண்ணோட்ட அரசியலால் தமிழக தாழ்ந்து போய் விட்டது. நதிகளை இணைக்கவில்லை. ஆறுகளை தூர் வாரவில்லை. குளம், குட்டைகளை பேணி பாதுகாக்கவில்லை'' என்று கூறினார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close