Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அத்துமீறி நடக்கும் டாஸ்மாக் கடை... பொதுமக்கள் கொந்தளிப்பு!

சமீபத்தில், நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டருக்குள் இருக்கும் மதுபானக் கடைகள் மூடப்பட வேண்டுமென்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நெடுஞ்சாலைக்குப் பக்கத்தில் இருக்கும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு, அந்தக் கடைகளை வேறு ஓர் இடத்தில் திறக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இது, உள்ளூர் மக்களை மிகுந்த எரிச்சலூட்டியது. பல இடங்களில், புதிதாக முளைத்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டுமென போராட்டங்கள் வெடித்தன.

டாஸ்மாக் கடை நிர்வாகிகளில் சிலர், 500 மீட்டருக்குள் இருக்கும் மதுபானக்கடையை அகற்றாமல், கடைக்கும் நெடுஞ்சாலைக்குமான தூரத்தை மட்டும் தந்திரமாகக் கூட்டினர். திருச்சி ரோடு, சூலுரில் இருக்கிறது டாஸ்மாக் கடை எண்.1836. அதிலும் இதைப் போல ஒரு சம்பவம்தான் நடந்துள்ளது. இந்தக் கடை, நெடுஞ்சைலையில் இருந்து 300 மீட்டர் தூரத்திலேயே இருந்தது. எனவே, நீதிமன்ற உத்தரவுப்படி இந்தக் கடை மூடப்பட்டிருக்க வேண்டும். இந்தக் கடையை மூடுவது குறித்து அதிகாரிகள் சோதனை நடத்த வருவதற்கு முன், கடையின் நுழைவாயிலை மாற்றி, சாதாரணமாக கடைக்குள் வரும் பாதையை மறித்துள்ளனர் அந்தக் கடையின் ஊழியர்கள். அவர்கள் மறித்த பாதை, பொது மக்கள் பயன்படுத்தும் வழியும் ஆகும். பாதையை மறித்த பின், டாஸ்மாக் கடைக்குச் செல்லும் தூரம் 700 மீட்டர்களாக அதிகரித்தது. இருப்பினும் கடையைச் சோதனையிட்ட அதிகாரிகள், டாஸ்மாக் கடையைத் தொடர்ந்து நடத்துவதற்கு அனுமதி மறுத்தனர். மேலும், மக்கள் பயன்படுத்தும் பொதுப் பாதையை அடைத்ததாலும், உள்ளூர்காரர்கள் பிரச்னையை போலீஸிடம் எடுத்துச் சென்றுள்ளனர்.

இந்த விஷயம் குறித்து உள்ளூர்வாசி ஒருவர், 'கடையைத் தொடர்ந்து இயக்குவதற்கு அதிகாரிகள் முறையான அனுமதி வழங்கவில்லை. மேலும், மக்கள் அதிகம் இருக்கும் பகுதியில் டாஸ்மாக் கடையை மூடுவதே நல்லதே. ஆனால் அதிகாரிகளின் உத்தரவுக்குப் பின்னரும், டாஸ்மாக் கடை ஊழியர்கள் பொதுப் பாதையை அடைத்துவிட்டு, கடையை நடத்துகின்றனர். இதுகுறித்து கடையில் வேலை செய்பவர்களிடம் கேட்டபோது, சரியான பதில் கூறவில்லை. இதனால், காவல் துறையில் புகார் பதிவுசெய்துள்ளோம்.' என்று கூறினார். 

ஆக மொத்தம், அங்கு இயங்கிவரும் டாஸ்மாக் கடை, கோர்ட் உத்தரவையும் மீறி, பொதுப் பாதையை மறித்து இயங்கிக்கொண்டிருக்கிறது. இதனால், உள்ளூர் மக்கள் இந்த விஷயத்தை மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துச்செல்ல உள்ளனர். 

நன்றி: TOI
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close