Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அ.தி.மு.க பிளவுக்கு இவர்கள்தான் காரணம்! நல்லகண்ணு புகார்

Nallakannu

அ.தி.மு.க-வின் பிளவுக்கும் வருமான வரித்துறை சோதனைக்கும் முழுப் பொறுப்பு, பா.ஜ.க.தான் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு குற்றம் சாட்டினார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க மூன்றாகப் பிளவுபட்டுள்ள நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய சோதனை, ஆளும் கட்சியை அதிரவைத்தது. இந்தச் சோதனையின்போது இடையூறு செய்ததாக, அமைச்சர்கள் காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ மற்றும் தளவாய் சுந்தரம் ஆகியோர்மீது வருமான வரித்துறையினர் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில், நான்கு பேர்மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளது ஆளும்கட்சியினரை மேலும் அதிர்ச்சியடையவைத்துள்ளது.

இதனிடையே, இரட்டை இலைச் சின்னம் பெற்றுத் தரக் கோரி, டி.டி.வி.தினகரன்  50 லட்ச ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக, இடைத்தரகர் சுகேஷ் சந்தர் என்பவரை டெல்லி காவல்துறையினர் இன்று கைதுசெய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, அ.தி.மு.க-வின் பிளவுக்கும் வருமான வரித்துறை சோதனைக்கும் முழுப்பொறுப்பு, பா.ஜ.க.தான். குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் பதவி விலக வேண்டும். மக்கள் விரோதப் போக்கை எதிர்க்கும் அனைத்துக் கட்சிகளுடன் இந்திய கம்யூனிஸ்ட் இணைந்து செயல்படும்" என்று கூறினார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close