Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு: மத்திய அரசை எதிர்க்கும் தமிழக அரசு!

பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு, தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

TN goverment


நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கு நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுவது போல, பொறியியல் படிப்புகளுக்கும் பொது நுழைவுத் தேர்வு நடத்த, மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு முதல், நாடு முழுவதும் பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. இதற்கு, பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்புகள் எழுந்தன.

இந்த நிலையில், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு, தமிழக அரசு இன்று கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில், "தமிழக அரசு, பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு நடந்தால், கிராமப்புற மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக, நுழைவுத்தேர்வு நடந்தால், அதிகப் பயிற்சி மையங்கள் உருவாகும் என்று புகார் எழுந்துள்ளது. இதனால், பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வில் இருந்து, தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close