Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சசிகலா அணியினருக்கு பன்னீர்செல்வம் பகிரங்க அழைப்பு!

'அ.தி.மு.க-வின் இரு அணிகளும் ஒன்றாக இணைவது தொடர்பாக சசிகலா அணி எங்களை அணுகினால், அவர்களுடன் பேச நாங்கள் தயார்' என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

paneerselvam


ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க இரண்டாகப் பிரிந்தது.  ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க, 'புரட்சித்தலைவி அம்மா அணி' எனவும், சசிகலா தலைமையிலான அ.தி.மு.க, 'அம்மா அணி'  எனவும் செயல்படுகின்றன.  ஆர்.கே.நகர்த் தொகுதி இடைத்தேர்தலில், மதுசூதனன் மற்றும் டி.டி.வி.தினகரன் இரு அணிகளின் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இரு அணிகளும் தீவிர பிரசாரம்செய்துவந்த நிலையில்,  ஆர்.கே.நகர்த் தேர்தல் ரத்துசெய்யப்படுவதாகத்  தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்தது.

ஆர்.கே.நகரில் 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்யப்பட்ட விவகாரத்தில், தேர்தல் ரத்துசெய்யப்பட்டதாகத் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரி சோதனை, பணப்பட்டுவாடா என, தொடர்ந்து அ.தி.மு.க-வுக்கு அடி மேல் அடி விழுந்தது. இதனால், மக்கள் ஆளும் கட்சிமீது அதிருப்தியை வெளிப்படுத்திவருகின்றனர். இரு அணிகளாக இருக்கும் அ.தி.மு.க மீண்டும் இணைந்தால் மட்டுமே இதற்குத் தீர்வு கிடைக்கும் என அ.தி.மு.க நிர்வாகிகள் கருதுவதாகவும், இரு அணிகளும் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் தகவல் வெளியானது.

சென்னை விமான நிலையத்தில், இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வத்திடம், இரு அணிகள் இணையும் வாய்ப்பு உள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த பன்னீர்செல்வம், ”இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக டெல்லியில் இன்று விசாரணை நடக்கிறது. இரட்டை இலைச் சின்னம் எங்கள் அணிக்குத்தான் ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. சசிகலா அணியினர் எங்களை அணுகினால், அ.தி.மு.க அணிகள் ஒன்றுசேர்வது பற்றி பேச்சுவார்த்தை நடத்தத் தயார்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காக டி.டி.வி.தினகரன் லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அவர் மீது டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்தச் சூழலில், சசிகலாவைச் சந்திக்க இன்று தினகரன் பெங்களூரு செல்கிறார். சிறையில் உள்ள சசிகலாவைச் சந்தித்துப் பேசிய பின்னர், பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்கிறது அ.தி.மு.க வட்டாரங்கள்!

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close