Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அவல நிலையில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்!

அரசுக் கல்லூரிகள்

 

கடந்த சில வருடங்களாக கலை அறிவியல் கல்லூரிகளின் பக்கம் மாணவர்களின் கவனம் திரும்பியிருக்கிறது. பொறியியல் படித்தவர்களுக்கு உரிய வேலை கிடைக்காததாலும், மருத்துவப் படிப்புக்கு தேசிய அளவில் நுழைவுத்தேர்வு நடத்தப்படுவதாலும் இந்தாண்டு கலை அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அரசுக் கலை அறிவியல் கல்லூரிகளின் நிலை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி, கல்லூரிக் கல்வி இயக்ககத்திடம் தகவல் கேட்டிருந்தோம். மொத்தமுள்ள 82 கல்லூரிகளில், 41 அரசுக் கலை அறிவியல் கல்லூரிகள் பற்றிய விபரங்கள் நமக்கு அதிகாரப்பூர்வமாக அனுப்பி வைக்கப்பட்டன.  அரசுக் கல்லூரிகளின் அவல நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன அந்தத் தகவல்கள்.

 

அரசுக் கல்லூரிகள்

ஆசிரியர் பற்றாக்குறையால் அரசுக் கல்லூரிகள் திணறுகின்றன. ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கணக்கானோர் பணி ஓய்வு பெற்றுச் செல்லும் நிலையில், 2013-க்குப் பிறகு கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவே இல்லை. அவ்வப்போது, சட்டசபையில் அறிவிப்பதோடு சரி... பெரும்பாலான கல்லூரிகள் கௌரவ விரிவுரையாளர்களின் தயவில் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. 
தமிழகத்தில் உள்ள 95 சதவீத அரசுக் கல்லூரிகளில் நூலகர்கள் இல்லை. 90 சதவீதக் கல்லூரிகளில் உடற்கல்வி இயக்குனர்கள் இல்லை. ராமநாதபுரம் அரசு மகளிர் கல்லூரியில் 48 ஆசிரியர்கள் இருக்க வேண்டும். 33 இடங்கள் காலி. 126 ஆசிரியர்கள் இருக்க வேண்டிய கிருஷ்ணகிரி ஆண்கள் கலைக்கல்லூரியில் 43 இடங்கள் காலியாக உள்ளன. பாரம்பரியமிக்க காரைக்குடி அரசு அழகப்பா கலைக்கல்லூரியில் 136 ஆசிரியர்கள் இருக்க வேண்டும். 44 இடங்கள் காலியாக உள்ளன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதிகளில் ஒன்றான பர்கூரில் உள்ள அரசுக் கலைக்கல்லூரியில் 67 ஆசிரியர்கள் இருக்க வேண்டிய நிலையில், 49 இடங்கள் காலியாக உள்ளன. 721 மாணவர்கள் படிக்கிற நிலக்கோட்டை அரசு மகளிர் கல்லூரிக்கு ஒதுக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் 63. அதில் 29 இடங்கள் காலி. இவையெல்லாம் ஒரு சோறு பதம். 95 சதவீதக் கல்லூரிகளில் இதுதான் நிலை. 

 

அரசுக் கல்லூரிகள்


ஒவ்வொரு கல்லூரியிலும் உள்ள துறைகளின் எண்ணிக்கை, அரசு ஒதுக்கீடு செய்த ஆசிரியர்களின் எண்ணிக்கை, தற்போது பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை, பிற பணியிடங்களின் எண்ணிக்கை கீழே..!

கீழே உள்ள டிராப் பாக்ஸில் கல்லூரியைத் தேர்வு செய்தால் அந்தக் கல்லூரிப் பணியிடங்கள் பற்றிய முழுமையான விபரங்கள் தெரியவரும். அதைப் பார்த்தாலே அரசுக் கல்லூரிகளின் இன்றைய அவல நிலை உங்களுக்குப் புரிந்து விடும். இந்த சுட்டியைக் க்ளிக்கினால் தெரியும் #VikatanPhotoCards -ல் நீங்கள் தேடும் கல்லூரி இருக்கிறதென்றால்.. அதன்மூலமும் தெரிந்து கொள்ளலாம்.

 

தமிழகக் கல்லூரிகளின் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் குறித்து தெரிந்து கொள்ள... இங்கே க்ளிக்கவும்...

 

அறிஞர் அண்ணா அரசுக் கல்லூரி, ஆத்தூர்

 

 

 

 

தனியார் பள்ளிகளை வளர விட்டு, அரசுப்பள்ளிகளை தேய விட்ட மாதிரி, கல்லூரிகளையும் கைவிட நினைக்கிறதா தமிழக அரசு? பண்பாட்டு அடையாளத்தைக் காப்பாற்ற தெருவுக்கு வந்து போராடிய மாணவர்கள், தங்கள் எதிர்காலத்துக்காக களத்துக்கு வர வேண்டுமா? தீர்மானிக்க வேண்டியது அரசு தான்!
 

- வெ.நீலகண்டன்

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close