Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டி.டி.வி.தினகரன் கைதா? சென்னை வருகிறது டெல்லி போலீஸ்!

இரட்டை இலைச் சின்னத்தைப் பெற, லஞ்சம் வாங்கிய விவகாரம் தொடர்பாக ஒருவர் கைதானதைத் தொடர்ந்து, இது குறித்து டி.டி.வி.தினகரனிடம் விசாரணை நடத்த டெல்லி போலீஸ் சென்னை வருகிறது.  விசாரணையின் முடிவில் அவர் கைதுசெய்யப்படலாம்  எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

TTV dinakaran
 

இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கீடு தொடர்பான விசாரணையைத் தேர்தல் கமிஷன் இன்று நடத்த உள்ளது. இந்த நிலையில், இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காக, டி.டி.வி.தினகரன் லஞ்சம் கொடுத்ததாக, அவர் மீது டெல்லி போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் தினகரன் மீது வழக்குப்பதிவுசெய்துள்ளனர். 

இந்த வழக்கு தொடர்பாக, தமிழகத்தைச் சேர்ந்த சுகேஷ் சந்தர் என்பவர், சந்தேகத்தின் பேரில்  கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 1.5 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இரட்டை இலைச் சின்னம் பெறுவதற்காக டி.டி.வி.தினகரனிடம் இருந்து பணம் வாங்கியது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்த, ஏ.சி.பி சஞ்சய் ராவத் தலைமையில் டெல்லி போலீஸ் நாளை சென்னை வருகிறது. சுகேஷின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து, டி.டி.வி.தினகரனிடம் விசாரணை நடத்தப்படுகிறது. இதனால், டி.டி.வி.தினகரனுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. அவர் லஞ்சம் கொடுத்தது உறுதி ஆகும் பட்சத்தில், கைதுசெய்யப்படுவார் எனத் தகவல்கள் கூறுகின்றன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close