Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நீதிமன்ற வளாகத்தில் கண்கலங்கிய வைகோ!

2009-ம் ஆண்டு, விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாகக் கூறி, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ மீது தேசத்துரோக வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை விரைந்து முடிக்க, வைகோ கோரியிருந்தார். இதுகுறித்து, எழும்பூர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல்செய்திருந்த மனுவில், வழக்கை விரைவாக நடத்தவில்லை என்றால், தன்னைக் கைதுசெய்ய அவர் கோரியிருந்தார்.

Vaiko

குறிப்பாக, ஜாமீனில் வெளிவர விருப்பமில்லை என்று அவர் கூறினார். இதனால், அவருக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல் விதித்து, நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இன்றுடன், அவரது 15 நாள் காவல் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, அவர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரது நீதிமன்றக் காவலை, வரும் 27-ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.


நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, 'விவசாயிகள் போராட்டத்தை, மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது நல்லதல்ல. மோடி, விவசாயிகளைச் சந்தித்து, அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். மேகதாது விவகாரத்தில் மத்திய அரசு, கர்நாடக அரசுக்கு சாதகமாகவும், தமிழகத்துக்குப் பாதகமாகவும் செயல்படுகிறது. ஹைட்ரோகார்பன் திட்டத்தை, தமிழகத்துக்குள் கொண்டுவர விட மாட்டோம். மதுவுக்கு எதிராகப் போராடிய பெண்ணைத் தாக்கிய காவல்துறை அதிகாரியை ஏன் சஸ்பெண்ட் செய்யவில்லை' என்றார்.

வைகோவைப் பார்க்க, ம.தி.மு.க தொண்டர்கள் எழும்பூர் நீதிமன்ற வளாகத்துக்குள் குவிந்தனர். அவர்களிடம், சற்று நேரம் உரையாடிய வைகோ, மீண்டும் சிறை செல்வதற்காக வாகனத்தில் ஏறியபோது கண்கலங்கினார். 

படங்கள்: ஆ.முத்துக்குமார்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close