Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டி.டி.வி.தினகரன் ஆடியோ கிடைத்துள்ளது! டெல்லி போலீஸ் பகீர் தகவல்

இரட்டை இலைச் சின்னத்தைப் பெற, டி.டி.வி.தினகரன் லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அவர் மீது டெல்லி போலீஸார் வழக்குப்பதிவுசெய்துள்ளனர். இந்த வழக்கில், இடைத்தரகர் என்று கைதுசெய்யப்பட்டுள்ள  சுகேஷ் சந்தர்  என்பவரிடம், காவல்துறை தீவிரமாக விசாரணை மேற்கொண்டது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இரட்டை இலைச் சின்னம் பெறுவதற்காக தினகரனிடம் இருந்து பணம் வாங்கியது தெரியவந்துள்ளது. 

ttv dinakaran

மேலும், சுகேஷ் தங்கி இருந்த ஹோட்டல் அறை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அவரிடம் இருந்து 1.3 கோடி ரூபாய் கைப்பற்றியதாக டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது. அவரின் லேப்டாப், மொபைல் போன் உள்ளிட்டவை ஆய்வுசெய்யப்பட்டுவருகிறது. இந்த நிலையில் தினகரன், சுகேஷுடன் பேசிய ஆடியோ கிடைத்துள்ளதாக காவல்துறை கூறியுள்ளனர். இந்த விவகாரம் குறித்து விசாரிக்க, ஏ.சி.பி சஞ்சய் ராவத் தலைமையிலான டெல்லி போலீஸ் நாளை சென்னை வருகிறது.  இதற்கிடையில், 'டெல்லியில் கைதுசெய்யப்பட்ட நபர் யாரென்றே தெரியாது' என்று தினகரன் கூறிவருகிறார். 
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close