Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வருமானவரித்துறை அலுவலகத்தில் மீண்டும் ஆஜரானார் கீதாலட்சுமி!

தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி, ஏப்ரல் 7-ம் தேதி நடந்த வருமானவரி சோதனை தொடர்பான விசாரணைக்கு வருமானவரித்துறையில் புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் இன்று மீண்டும் ஆஜரானார்.

Geetha lakshmi
 

கடந்த 7-ம் தேதி, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அ.தி.மு.க-வைச் சேர்ந்த சிட்லபாக்கம் ராஜேந்திரன் மற்றும் சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏ-க்கள் விடுதிகளிலும் சோதனை நடைபெற்றது. சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். 

வருமான வரி சோதனையைத் தொடர்ந்து, அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், கீதாலட்சுமி ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என்று வருமான வரித்துறை கடந்த 9-ம் தேதி சம்மன் அனுப்பியது. சென்னை வருமான வரித்துறையினர் அனுப்பிய சம்மனைத் தொடர்ந்து, அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சரத்குமார், சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர்  கடந்த 10-ம் தேதி,  நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரானார்கள். அவர்களிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து,  வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 

ஆனால், வருமான வரித்துறையினர் அனுப்பிய சம்மனுக்குத் தடை விதிக்கக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் கீதாலட்சுமி மனு தாக்கல்செய்தார். அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கீதாலட்சுமிக்கு கண்டனம் தெரிவித்ததோடு, விசாரணையில் இருந்து தப்பிக்க நினைக்கக்கூடாது என்று சாட்டையடி கொடுத்தது. இதையடுத்தே, கீதாலட்சுமி கடந்த 12-ம் தேதி நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்துக்கு வந்தார். அவரிடம்,  வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து, விஜயபாஸ்கர்  மற்றும் கீதாலட்சுமி ஆகியோர் 17-ம் தேதி  மீண்டும் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியது வருமான வரித்துறை.  சம்மனை தொடர்ந்து வருமானவரித்துறையின் புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் கீதா லட்சுமி  இன்று மீண்டும் ஆஜரானார். ஆனால், விஜயபாஸ்கர் தற்போது வரை ஆஜராகவில்லை. அவர் தனது உதவியாளரிடம் ஆவணங்களை கொடுத்தனுப்பி சமர்ப்பிக்க வைத்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close