Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தேசிய விருதுகளைவிட சர்வதேச விருதுகள் மேலானவை! லீனா மணிமேகலை கருத்து

தனி விருப்புவெறுப்பு சார்ந்த தேசிய விருதுகளைவிட சர்வதேச விருதுகள் மேலானவை என கவிஞர் லீனா மணிமேகலை கருத்து தெரிவித்துள்ளார். தேசிய விருதுகள் குறித்த தனது அதிருப்தியை அவர் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் 64-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. இவ்விருதுகள் நடுவர் குழுவின் தனிப்பட்ட சார்புடன் வழங்கப்பட்டுள்ளதாக சர்ச்சைகள் எழுந்தன. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும் தேசிய விருதுகள் ஒருதலைச் சார்புடன் வழங்கப்படுவதாகக் கூறினார். இந்நிலையில் கவிஞர் லீனா மணிமேகலை, 'தேசிய விருதுகளைவிட சர்வதேச விருதுகள் மேலானவை' எனக் கூறியுள்ளார்.

இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பதிவில், 'இந்த தேசத்தின் ஊழல் கறை படிந்த, தணிக்கை செய்யப்பட்ட, நேரடி அரசாங்கத் தலையீடு மலிந்த, தனி விருப்புவெறுப்பு சார்ந்த தேர்வுகளை அடிப்படையாகக் கொண்டுள்ள "தேசிய விருது" என்ற ஆகப்பெரிய ஜோக்கைவிட சர்வதேச விழாக்கள் சுதந்திர கலைஞர்களுக்கான முக்கியமான இடங்கள்தாம்' எனக் கூறியுள்ளார்.

மேலும், 'இந்தியாவுக்கு வெளியே நடக்கும் திரைப்பட விழாக்களில் அந்த நாட்டு அரசாங்கங்கள் தலையிடுவதில்லை. ஒரு மந்திரியையோ மேயரையோகூட பார்க்க முடியாது. தணிக்கை என்ற பேச்சுக்கே இடமில்லை. அங்கே கலந்துகொள்ள, களமாட செய்யவேண்டியதெல்லாம் "உண்மையான சினிமா" மட்டும்தான்' என அவர் பதிவிட்டுள்ளார்.  
 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close