Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சேவல் சண்டைக்கு சட்டத்திருத்தம்: தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

சேவல் சண்டை, கிடா முட்டு போட்டிகளை நடத்த சட்டத் திருத்தம் கோரிய வழக்கில், தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

பிராணிகள் வதை தடைச் சட்டத்தின் கீழ் சேவல் சண்டை, கிடா முட்டு, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை நீக்க கோரி எழுந்த போராட்டத்தின் விளைவாக சட்டத்திருத்தம் செய்யப்பட்டது. இதையடுத்து சேவல் சண்டை, கிடா முட்டு போட்டிகளுக்கும் தடை நீக்க சட்டத்திருத்தம் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இதனிடையே, இன்று வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழக அரசின் தலைமைச் செயலாளரை பதிலளிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். உசிலம்பட்டியைச் சேர்ந்த சின்னன் இவ்வழக்கை தொடர்ந்துள்ளார். இதையடுத்து வழக்கை ஜூலை 18-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. சேவல் சண்டை போட்டிகள் தடை செய்யப்பட்டிருப்பதால் நாட்டுக் கோழிகளின் உற்பத்தி குறைந்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close