Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டி.டி.வி. தினகரனை சிக்க வைத்த சுகேஷ் சந்தர் ஷேகர் ! 

இரட்டை இலைச் சின்னத்தை அ.தி.மு.க. அம்மா அணிக்கு வாங்கித்தர டி.டி.வி. தினகரனிடம் ரூ.50 கோடிவரை பேரம் பேசியதாக சுகேஷ்சந்தர்ஷேகர் இன்று டெல்லியில் கைதானார்.  
 

TTV dinakaran

தி.மு.க தலைவர் கருணாநிதியின் பேரன் என்று போனில் மிமிக்ரி செய்தும், குடும்ப உறுப்பினர் போல் போட்டோ மாபிங் செய்தும் மோசடியில் ஈடுபட்டதாக ஏற்கெனவே இவர் கைதானவர். சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் இதுகுறித்த விசாரணையை செய்து வந்தனர். ஆனால், சில மாதங்களிலேயே முக்கிய அதிகாரிகள், அரசியல் பிரமுகர்களின் ஆதரவில் வழக்கின் சுவடே தெரியாமல் தப்பினார். 

தென் மாநிலங்களில் மட்டுமே இவர்மீது 57 மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன. முதலமைச்சர்களின் உறவினர் என்றே பெரும்பாலும் மோசடியில் ஈடுபட்டு வந்தவர் இவர். 

வங்கி அதிகாரிகளின் துணையோடு மோசடியில் ஈடுபட்டதாக  சுகேஷ்சந்தர்ஷேகர் மீது சென்னையில் மட்டுமே 15 புகார்கள் விசாரிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. சுகேஷ்சந்தர்ஷேகர் மீது துணிந்து புகார்கொடுத்த சென்னை அம்பத்தூர் வங்கியொன்றின் முதுநிலை மேலாளர் ஒரே வாரத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். வங்கி அதிகாரியின் புகாரை 2010-ம் ஆண்டு விசாரித்த சென்னை மத்திய குற்றப்பிரிவின் உதவி கமிஷனர் அடுத்த விசாரணையின்போது திருச்சி ஆவணக்காப்பக டி.எஸ்.பி.யாக தூக்கியடிக்கப் பட்டிருந்தார்.

மலையாள நடிகை லீனா மரியம்பால் மற்றும் மாடலிங் துறையில் உள்ள பல பெண்களை தன்னுடைய வலையில் வீழ்த்தி காதல் மன்னனாகவும் வலம் வந்தார் சுகேஷ். விபசார தரகர் கன்னட பிரசாத்தை சென்னை மத்திய குற்றப்பிரிவுப்  போலீஸார் கைது செய்தபோது சசிகலா குரலில் போலீஸ் உயரதிகாரிகளிடம் பேசி மிரட்டிய புகாரும் விசாரணை அளவோடே இல்லாமல் நின்று போனது.

சீனியர் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று கூறிக்கொண்டு சென்னை எழும்பூரில் உள்ள அரசு காப்பகத்தில் மோசடி, வேலை வாங்கித் தருவதாக மோசடி என்று  2013-ம் ஆண்டு மட்டுமே 45 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக புகாரின் பேரில் இவர்மீது வழக்கு பதியப்பட்டன. வாழ்க்கையில் இத்தனை மோசடிகளை செய்திருந்தபோதும் 15 நாள் ரிமாண்டைகூட முழுமையாக சிறையில் கழிக்காமல் சுகேஷ்சந்தர்ஷேகர் வெளியில் வந்து விடுவார்.  'டி.டி.வி.தினகரனோடு சுகேஷ்சந்தர்ஷேகர் இரட்டை இலை டீல் பேசிய விவகாரம் முடிந்ததும் சு.ச.ஷேகரை நாங்களும்  விசாரிக்க வேண்டும்" என்று சென்னை போலீசார் டெல்லி போலீசாரிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். விசாரணையின்போது சுகேஷ்சந்தர்ஷேகர் ஒரு வார்த்தைக்கூட பேசக்கூடாது என்ற பதைபதைப்பு டி. டி. வி தரப்பில் நொடிக்கு நொடி எகிறிக் கொண்டிருக்கிறது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close