Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மே முதல் வாரத்தில் முதல்வராகிறார் ஓ.பி.எஸ் ! 8 மந்திரிகள் நீக்கம்...?!

அ.தி.மு.க.வின் இரண்டு அணிகளையும் இணைக்க மேற்கொண்ட  முயற்சியில் திடீர் முட்டுக்கட்டை விழுந்துள்ளது. ஓ.பி.எஸ் அணியோடு  எதிர்அணியை இணைக்க ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் பச்சைக் கொடி காட்டியிருந்தாலும் அது பலருக்கு சிவப்புக் கொடியாக மாறியிருக்கிறது.

ops

ஓ. பன்னீர் செல்வம் அணியின் முடிவு என்ன?  விசாரித்தோம்... 'அ.தி.மு.க. அம்மா அணியைச் சேர்ந்த டி.டி.வி. தினகரன், தம்பிதுரை மந்திரிகள் டாக்டர்  விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம்,  கே.டி. ராஜேந்திரபாலாஜி, செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ், கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன், தளவாய்சுந்தரம், ராஜன் செல்லப்பா சென்னை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்களான வெற்றிவேல், பாலகங்கா ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்படுவர்.

அதேபோல் அவர்கள் மீதான அடுத்தகட்ட சட்டப்பூர்வ  நடவடிக்கைக்கும் மற்றவர்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். பிற மந்திரிகள், மாவட்டச் செயலாளர்களுக்கு எங்களால் எந்த சிக்கலும் இல்லை. டி.டி.வி. தினகரன் மட்டுமல்ல, எம். நடராஜன் உள்ளிட்ட சசிகலா குடும்ப உறவுகள் யாரும் கட்சி-ஆட்சிப் பொறுப்புகளில் இருக்கக் கூடாது. முதல்வர்  எடப்பாடி மற்றும் குற்றச்சாட்டு பட்டியலில் இல்லாத நபர்கள் பழையபடியே மந்திரியாக தொடரலாம். கட்சியின் பொதுச்செயலாளராக ஓ.பன்னீர்செல்வம், பொருளாளராக பி.ஹெச்.பாண்டியன், அவைத்தலைவராக எப்போதும் போல் இ.மதுசூதனன் பொறுப்புகளை ஏற்பார்கள். தலைமைக் கழக செயலாளர், துணைப் பொதுச் செயலாளர்,  கொ.ப.செ. உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளில் உடனடி மாற்றம் செய்யப்படும். கே.பி.முனுசாமி, பொன்னையன், டாக்டர் மைத்ரேயன் மாஃபா. பாண்டியராஜன் தலைமை இதற்கான பணியை செய்து வருகிறது. ஓ.பி.எஸ்.  அணியின் இந்த முடிவு,  மூத்த அமைச்சர்களால் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாகவே இதற்கான கலந்தாய்வு போய்க் கொண்டிருக்கிறது.  பெருவாரியான ஆதரவாளர்களுடன் இவையனைத்தும் செயல்வடிவமாகி விடும். மே மாதத்தின் முதல்வாரத்தில் மீண்டும் ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக பொறுப்பேற்கிறார்' என தெரிவித்துள்ளனர்.

- ந.பா.சேதுராமன்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close