Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'இணைந்து செயல்படுவோம்... இரட்டை இலையை மீட்போம்...' - ஜெயக்குமார் பளீச்

சென்னையில் அமைச்சர் தங்கமணி வீட்டில் அ.தி.மு.க அமைச்சர்கள் திடீர் ஆலோசனை நடத்தினர். இதில் ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன், வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டுனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில், இரண்டாக பிளவுபட்டுக் கிடக்கும் அ.தி.மு.க.வை இணைப்பது பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின் அமைச்சர்கள் அனைவரும் செய்தியாளர்களைக் கூட்டாக சந்தித்தனர்

அப்போது பேசிய தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் 'ஓ.பன்னீர்செல்வம், ஒற்றுமையாக செயல்படுவது குறித்து கூறிய கருத்தை வரவேற்கிறோம். கழகத்தை ஒற்றுமையாக நடத்தவே இந்த ஆலோசனைக் கூட்டம். டி.டி.வி.தினகரன் பதவி தொடர்பாக இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசப்படவில்லை. அ.தி.மு.க.வின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் ஒற்றுமையோடு இருக்கிறார்கள். தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தினோம். இது ரகசியக் கூட்டம் அல்ல. அனைவருக்கும் தெரிந்தே இந்த ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது. சசிகலா ராஜினாமா கடிதம் கொடுத்ததாக கூறும் தகவல்களில் உண்மையில்லை. டி.டி.வி.தினகரன் பெங்களூரில் இருந்து வந்தவுடன், அவருடன் ஆலோசனை நடத்தி முடிவெடுப்போம்.' என்று அவர் கூறினார். 

படம்: மீ.நிவேதன்

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close