Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜார்ஜுக்கு மீண்டும் சிக்கல்! அவமதிப்பு வழக்கில் ஆஜராக உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நான்கு வாரத்தில் ஆஜராக வேண்டும் என்று முன்னாள் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புகையிலைப் பொருள்களைத் தடைசெய்ய உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில் அப்போது, சென்னை மாநகர காவல்துறை ஆணையராக இருந்த ஜார்ஜ் நேரில் ஆஜராகாததால் உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கடுமையாக எச்சரித்திருந்தார். இதையடுத்து, அடுத்தக்கட்ட விசாரணையின்போது ஜார்ஜ் உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். வழக்கிலிருந்து ஆஜராவதிலிருந்தும் விலக்கு பெற்றார்.

இந்நிலையில், சிறைத்துறை ஐ.ஜி.யாக இருந்தபோது தனக்கு பதவி உயர்வு தரவில்லை என முன்னாள் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் மீது டி.ஐ.ஜி.யாக இருந்த கண்ணன் புகார் கூறியிருந்தார். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் கண்ணன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கண்ணனுக்குப் பதவி உயர்வு வழங்க ஜார்ஜுக்கு உத்தரவிட்டிருந்தது.

ஆனால், கண்ணனுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இதையடுத்து, ஜார்ஜ் மீது உயர்நீதிமன்றத்தில் கண்ணன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நான்கு வாரத்தில் ஜார்ஜ் நேரில் ஆஜராக வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகர காவல்துறை ஆணையராக இருந்த ஜார்ஜ், ஆர்.கே.நகர்த் தொகுதி இடைத்தேர்தலின்போது தேர்தல் ஆணையத்தால் அதிரடியாக மாற்றப்பட்டார். தற்போது வரை அவருக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை. காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார் ஜார்ஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close