Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மதுரையில் மதுக்கடையைச் சூறையாடினர் பொதுமக்கள்!

மதுரையில், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து, மதுக்கடையைச் சூறையாடினார்கள்.

People Ransacked Tasmac in Madurai


தமிழகத்தில், மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள காலகட்டம் இது. தினசரி பல்வேறு பகுதிகளில், மதுக்கடைகளை மூட வலியுறுத்தி, ஆங்காங்கே போராட்டங்கள் நடந்துவருகின்றன.

People Ransacked Tasmac in Madurai


இந்த நிலையில், மதுரை மாவட்டம் பொய்கரைப்பட்டியில், பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் மனநல மருத்துவமனை ஆகிய இரண்டுக்கும் அருகே, ஒரு மதுபானக் கடை இருந்தது. அந்த மதுக்கடையை மூட வலியுறுத்தி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவந்தனர்.

People Ransacked Tasmac in Madurai


ஆனால், அவர்களது போராட்டங்களை அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. கடை எப்போதும் போலவே இயங்கிவந்தது. இதனால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், அந்த மதுபானக் கடையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். ஒரு கட்டத்தில், அந்த மதுக்கடையை அடித்து நொறுக்க ஆரம்பித்தனர். மாணவர்களும் அந்த பகுதி மக்களும் மதுக்கடையை சூறையாட, இதைத் தடுக்க வந்த மதுபானக்கடை ஊழியர்களையும் போராட்டக்காரர்கள் அடித்துவிரட்டனர். இந்தப் போராட்டத்தால், அந்தப் பகுதி போர்க்களமாக மாறியது.

People Ransacked Tasmac in Madurai

குறிப்பாக, இந்தப் போராட்டத்தில் ஏராளமான பெண்களும் கலந்துகொண்டனர்.

படங்கள்: இ.ஜெ.நந்தகுமார்

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close