Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'பன்னீர்செல்வத்தின் நிபந்தனையை ஏற்க மாட்டோம்' - தங்க தமிழ்ச்செல்வன் தடாலடி!

'பன்னீர்செல்வம் அணியின் நிபந்தனையை ஏற்க மாட்டோம்' என்று எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

அ.தி.மு.க அம்மா அணியின் டி.டி.வி தினகரனை அடையாறில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தார்,ஆண்டிபட்டி எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன்.

ThangaTamilselvan


இந்த சந்திப்புக்குப் பிறகு, தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,  "எங்களுக்குள் எந்தவித குழப்பமும் இல்லை. சசிகலா அணியில் பன்னீர்செல்வம் இணைய முன்வந்தால் வரவேற்போம். பன்னீர்செல்வம் வந்தால், அவரை ஏற்றுக்கொள்வதாக தினகரன் கூறியுள்ளார்.  பன்னீர்செல்வம் அணி இணைந்தால், இரட்டை இலைச் சின்னம் மீண்டும் கிடைக்கும். சசிகலா குடும்பத்தை நீக்க வேண்டும் என பன்னீர்செல்வம் கூறுவதை ஏற்க முடியாது. அதைக் கூற பன்னீர்செல்வத்துக்குத் தகுதி இல்லை. இரு அணிகளும் இணைவதற்காக குழு ஏதும் அமைக்கப்படவில்லை.


தினகரனின் ஆதரவால் உயர்ந்தவர், ஓ.பன்னீர்செல்வம். பன்னீர்செல்வம் நிபந்தனை விதித்தால், அதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.  எங்களுக்கு 122 எம்எல்ஏ-க்களின் ஆதரவு உள்ளது. பொதுச்செயலாளர், துணைப் பொதுச்செயலாளரை தொண்டர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்" என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close