Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இணையதள விருதுக்குத் தேர்வுசெய்யப்பட்ட தமிழரின் சாதனை வீடியோ!

சிறந்த இணையதளப் பங்களிப்புக்கான 'வெப்பி' விருதுகளுக்கு, அல்-ஜஸீராவின் காணொளிக் கட்டுரை தேர்வாகியுள்ளது. இந்தியாவின் 'பேட்மேன்' என அழைக்கப்படும் முருகானந்தத்தின் சாதனையை விளக்கும் வீடியோ இதுவாகும்.

இணையதளத்தில் சிறந்த படைப்புகளை வழங்குபவர்களுக்கு, ஆண்டுதோறும் 'வெப்பி' அவார்ட்ஸ் வழங்கப்பட்டுவருகிறது. இதற்காகத் தேர்வுசெய்யப்பட்டவர்களுக்கு, ஆன்லைனில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு விருதுகள் வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான சிறந்த சமூகம் சார்ந்த பங்களிப்புக்கான தேர்வுகளில், தமிழகத்தின் முருகானந்தம் பற்றிய அல்-ஜஸீராவின் வீடியோ கட்டுரை தேர்வுசெய்யப்பட்டுள்ளது.

பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளுக்காகப் பயன்படுத்தப்படும் 'பேடுகளை' குறைந்த செலவில் தயாரித்து வழங்கிவருபவர், முருகானந்தம். தனது சொந்தச் செலவில், கடுமையாக உழைத்து இந்த நிலைக்கு வந்திருக்கும் முருகானந்தத்தின் சாதனையை, அல்-ஜஸீரா ஊடக நிறுவனம் பதிவுசெய்தது. இந்த வீடியோ காட்சி, இணையதள விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முருகானந்தத்தின் கதையை, அக்‌ஷய் குமார் நடிப்பில் இயக்குநர் பால்கி படமாக்க உள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close