Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'அமைச்சர்கள் நாடகமாடுகின்றனர்' : பொங்கும் தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள்

தினகரன், சசிகலா குடும்பத்தை ஒதுக்கிவிட்டு ஆட்சியை நடத்துவோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். இதே கருத்தை அமைச்சர்கள் சி.வி சண்முகம், மணிகண்டன், நடராஜன் ஆகியோர் வலியுறுத்தினர். குறிப்பாக, இந்தக் கருத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிப்பர் என்று ஜெயக்குமார் கூறினார். அமைச்சர்களின் இந்தக் கருத்துக்கு டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.  

Vetrivel


இதுகுறித்து, பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ வெற்றிவேல், அமைச்சர்கள் அனைவரும் பதவியை தக்கவைத்துக்கொள்ள, திட்டமிட்டு நாடகம் நடத்துகின்றனர்  என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து சாத்தூர் எம்எல்ஏ சுப்பிரமணியன் கூறுகையில், 'அமைச்சர்கள் நடத்திய ஆலோசனையில் தினகரனுக்கு உடன்பாடு இல்லை. அனைத்து எம்எல்ஏ-க்களும் தினகரனுக்கு ஆதரவாக உள்ளனர். நேற்று ஒன்று, இன்று ஒன்று எனச் சிலர் பேசிவருகிறார்கள்' என்று கூறியுள்ளார். 

அமைச்சர்கள் யாரையும் கலந்து ஆலோசிக்காமல், தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளனர் என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close