Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'நாடகத்தை முடிவுக்குக் கொண்டுவாருங்கள்..!'- தமிழிசை காட்டம்

தற்போது, அ.தி.மு.க-வில் நடந்துவரும் உள்கட்சிக் குழப்பம்பற்றி கருத்துக் கூறிய தமிழிசை சௌந்தரராஜன், 'நாடகத்தை முடித்துவிட்டு சீக்கிரம் நிலையான ஆட்சியைக் கொடுங்கள்' என்றார்.

தலைமைச் செயலகம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் இன்று தமிழக அமைச்சர்கள், அ.தி.மு.க-வின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.

ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களை அமைச்சர்கள் கூட்டாகச் சந்தித்தனர். அப்போது நிதி அமைச்சர் ஜெயக்குமார், 'தினகரன் குடும்பத்தை ஒதுக்கிவைத்துவிட்டு ஆட்சியை நடத்துவோம். கட்சியும் ஆட்சியும் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடாது. பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தைக்கு வந்தால், அவருடன் பேசத் தயார்.' என்று தெரிவித்தார்.

இந்த அரசியல் சூழல்குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், 'மக்கள் பிரச்னையில் அமைச்சர்கள் கவனம் செலுத்த வேண்டும். ஆட்சியைக் காப்பாற்ற அவர்கள் நாடகம் நடத்துகின்றனர். நாடகத்தை சீக்கிரம் முடிவுக்குக் கொண்டு வாருங்கள். மக்களுக்கு நிலையான அரசு வேண்டும். மக்கள் நிலைபாட்டுக்கு எதிராக ஆட்சி நடந்தால், அதை பா.ஜ.க எதிர்க்கும்.' என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close