Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆதரவு எம்எல்ஏ-க்களுடன் தினகரன் திடீர் ஆலோசனை... முக்கிய முடிவு எடுக்கப்போவதாகத் தகவல்!

அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் ரெய்டு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து, டி.டி.வி.தினகரன் மீது டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு என்று தொடர் சம்பவங்கள் ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க, இன்று தலைமைச் செயலகம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் தமிழக அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு, 'தினகரன் குடும்பத்தை ஒதுக்கிவைத்துவிட்டு, ஆட்சியை நடத்துவோம். கட்சியும் ஆட்சியும் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடாது. பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தைக்கு வந்தால், அவருடன் பேசத் தயார்.' என்று அமைச்சர்கள் கூறினர்.

இந்த நிலையில், அ.தி.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், அடையாறு வீட்டில் அவரது ஆதரவு எம்எல்ஏ-க்களுடன் தற்போது ஆலோசனை நடத்திவருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அ.தி.மு.க-வைச் சேர்ந்த 6-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்கள் கலந்துகொண்டுள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு, டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close