Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னை போலீஸ் 6 மணிக்கு பணிக்கு வர உத்தரவு எனத் தகவல்!

அ.தி.மு.க-வின் உள்கட்சிக் குழப்பத்தால், தமிழக அரசியல் களம் பரபரப்பான சூழலை எட்டியுள்ளது. இந்த நிலையில், சென்னையில் பணிபுரியும் அனைத்துக் காவலர்களும் காலை 6 மணிக்கு பணிக்கு வர வேண்டும் என, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் கரண் சின்ஹா உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வந்துள்ளது. 

நேற்று, தலைமைச் செயலகம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் தமிழக அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.

 பிறகு, செய்தியாளர்களை அமைச்சர்கள் கூட்டாகச் சந்தித்தனர். அப்போது பேசிய நிதி அமைச்சர் ஜெயக்குமார், 'தினகரன் குடும்பத்தை ஒதுக்கிவைத்துவிட்டு, ஆட்சியை நடத்துவோம். கட்சியும் ஆட்சியும் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடாது. பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தைக்கு வந்தால், அவருடன் பேசத் தயார்.' என்று கூறினார்.

இதையடுத்து, அடையாறில் இருக்கும் தனது வீட்டில், டி.டி.வி.தினகரன் தனது ஆதரவு எம்எல்ஏ-க்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இப்படி, அ.தி.மு.க-வில் உள்கட்சிக் குழப்பம் அதிகரித்துள்ள நிலையில், சென்னை மாநகரக் காவல் ஆணையர் கரண் சின்ஹா, சென்னையில் பணிபுரியும் காவலர்கள் அனைவரும் காலை 6 பணிக்கு பணிக்கு வருமாறு உத்தரவிட்டு இருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close