Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சமரசத்தால் இதுதான் நடக்கும்! பன்னீர்செல்வத்தை எச்சரிக்கும் வி.சி.க

ஆளும்கட்சியினருடன் சமரச முடிவு ஓபிஎஸ்ஸுக்கு இருக்கும் ஆதரவில் மிகப்பெரிய சரிவைத்தான் உருவாக்கும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ஃபேஸ்புக் பதிவில் கருத்து தெரிவித்துள்ள அவர், ஆளும் தரப்பினரோடு சமரசம் செய்துகொள்வதென்ற ஓபிஎஸ்சின் முடிவு தவறு என்பதை மிக விரைவில் அவரும் அவரது ஆதரவாளர்களும் உணர்வார்கள். ஓபிஎஸ் அணிக்கு மக்கள் மத்தியில் இருந்தது அவரது இமேஜால் ஏற்பட்ட சாதகமான ஆதரவு அல்ல, அது ஆளும் தரப்புமீதிருந்த கோபத்தால் வந்த எதிர் ஆதரவே.

ஒரு குடும்பத்தை மட்டும் ஒதுக்கி வைப்பதால் ஆளும் தரப்புமீதான கோபம் குறைந்துவிடாது. இது சந்தர்ப்பவாத முடிவு என்பதையும் பாஜகவின் மேற்பார்வையில் நடக்கும் நாடகம் என்பதையும் மக்கள் நன்றாக உணர்வார்கள். இந்த சமரச முடிவு ஓபிஎஸ்ஸு க்கு இருக்கும் ஆதரவில் மிகப்பெரிய சரிவைத்தான் உருவாக்கும்" என்று கூறியுள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close