Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'டி.டி.வி.தினகரனை தூக்கியெறிந்தது ஏன்?' நாஞ்சில் சம்பத் அடுக்கும் காரணங்கள்

நாஞ்சில் சம்பத்

மிழகத்தின் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அ.தி.மு.க-வின் தலைமை அலுவலகம், கடந்த சில மாதங்களாக வெறிச்சோடிக் கிடக்கிறது. ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, இரண்டாகப் பிரிந்து கிடக்கும் கட்சியின் இரு அணிகளின் தலைமையை நோக்கித் தொண்டர்கள் சென்றுகொண்டிந்தார்கள். அந்த நிலைக்குத் தற்போது முடிவு கட்டப்பட்டுள்ளது. கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து விலகியுள்ள டி.டி.வி.தினகரன், ''எனக்கு இதுவரை ஒத்துழைப்பு நல்கிய அத்தனை கழக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அவரின் இந்த அறிவிப்பு, அவரது தீவிர ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்கு இன்று மதியம் வந்த கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத்திடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

''சசிகலா குடும்பத்தினரை கட்சியை விட்டு ஒதுக்கி வைக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார்களே?''

''கட்சியும் ஆட்சியும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதுதான் இப்போது முக்கியம். அதைக் காப்பாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்றாலும், அதைச் செய்வதற்கு டி.டி.வி.தினகரன் தயார். 'பொதுச்செயலாளர் சசிகலா கொடுத்த துணைச் செயலாளர் பதவியை விட்டுக் கொடுப்பது என்றாலும், அதை சசிகலாவிடம் கேட்டுவிட்டு, உரிய முடிவை அறிவிப்பேன்'  என்று தினகரன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். 

''அமைச்சர்களின் முடிவு எதைநோக்கிப் போகிறது?''

''அமைச்சர்கள் ஏன் இந்த முடிவை எடுத்தார்கள் என்றால் அவர்களுக்கு ஏதோ அழுத்தம், அச்சம் இருக்கிறது. அழுத்தமும் அச்சமும் அவர்களைத் துரத்துகிறது. அவைதான், இப்படி ஒரு முடிவை எடுப்பதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.'' 

''பதவியில் இருக்க வேண்டும் என்ற அதிகாரப் பசிதான் ஓ.பன்னீர்செல்வத்தை, அமைச்சர்கள் ஆதரிக்கக் காரணமா?''

''இருக்கலாம். அதிகாரம் என்பது தொற்றுநோய். அது அனைவரையும் ஆட்கொள்ளும் என்று அண்ணாவே சொல்லியிருக்கிறார்''.

''அ.தி.மு.க நிர்வாகிகள் அடுத்த கட்டமாக எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?''

''கட்சியும் ஆட்சியும் இருக்க வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் விரும்புகிறார். அவருடைய விருப்பம்தான் என்னுடைய விருப்பமும். காலம் தந்த நல்ல தலைவர் டி.டி.வி.தினகரன். தீர்ந்துபோகாத திராவிட இயக்கத்தைச் சமவெளிக்குக் கொண்டு வருவதற்கு எல்லாவிதமான ஆற்றலும் ஆளுமையும் நிறைந்த தலைவர் அவர். வசீகரமானவர், வரலாற்று மாற்றத்துக்கு வாசல் திறந்து வைக்கிறவர் என்று நான் நம்பியிருந்தேன். அவரை விலகச்சொல்லியிருப்பது துரதிர்ஷ்டவசமானது. அவர் விலகிவிடுவாரானால் என்னைப் போன்றவர்களுக்கு வேலை இல்லை.''

- எஸ்.முத்துகிருஷ்ணன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close