Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களா அருகே திடீர் தீ விபத்து

ஜெயலலிதாவுக்கு சொந்தமான சிறுதாவூர் பங்களாவுக்கு அருகில் உள்ள புல்வெளிப் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தின் காரணமாக அந்தப் பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்படுகிறது. 


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவ்வப்போது சென்று ஓய்வெடுக்கும் பங்களா சிறுதாவூரில் உள்ளது. இந்த சிறுதாவூர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது. ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்தில் இந்த பங்களாவைச் சுற்றிலும் ஏராளமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பார்கள். ஜெயலலிதா இறந்தபிறகு போயஸ்கார்டன், சிறுதாவூர், கொடநாடு உள்ளிட்ட இடங்களில் போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டது.

தற்போது, சிறுதாவூர் பங்களாவுக்கு அருகில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறுதாவூர் பங்களாவுக்குப் பின்புறம் உள்ள புல்வெளிப் பகுதியில் தீ பற்றியது. இதனால் இந்தப் பகுதி முழுவதும் கடும் புகை மூட்டமாக உள்ளது. தீயை அணைக்க தீயணைப்புப் படையினர் விரைந்துள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close