Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சேகர் ரெட்டி கூட்டாளிகளின் சொத்துகள் முடக்கம் : அமலாக்கத்துறை நடவடிக்கை!

கறுப்புப் பணம் பதுக்கிய வழக்கில் கைதான, தொழிலதிபர் சேகர் ரெட்டியின் கூட்டாளிகள் இருவரது சொத்துகளை, அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர். 

sekar reddy

ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்ட பிறகு, நாடு முழுவதும் வருவாய்த் துறையினர் மற்றும் அமலாக்கத் துறையினர் கடுமையான சோதனைகளில் ஈடுபட்டனர். சென்னையில் நடைபெற்ற சோதனையில், தொழிலதிபர் சேகர்ரெட்டியின் வீட்டில் இருந்து 147 கோடி ரூபாய் பணமும், 178 கிலோ தங்கமும் பறிமுதல்செய்யப்பட்டது. அதில், 10 கோடி ரூபாய்க்கும் மேல் புதிய 2,000 ரூபாய் நோட்டுகளும் பிடிபட்டன.

இது தொடர்பாக, சேகர்ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகளான பிரேம்குமார், ஶ்ரீனிவாசலு ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். தற்போது, சேகர் ரெட்டியின் கூட்டாளிகள் அசோக்ஜெயின், மஹாவீர்ஜெயின் ஆகியோருக்குச் சொந்தமான 12 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர். மேலும், பரஸ்மல் லோதாவின்மூலம் சேகர் ரெட்டிக்கு 7 கோடி ரூபாய்க்கான புதிய நோட்டுகள் மாற்றப்பட்டதும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close