Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தினகரன் வீட்டில் டெல்லி போலீஸ்! தீக்குளிக்க முயன்ற தொண்டர்!

சென்னை அடையாறில் இருக்கும் டி.டி.வி.தினகரன் வீட்டுக்கு டெல்லி போலீஸார் வந்தனர். தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில், சம்மன் கொடுக்க அவர்கள் தினகரனை நேரில் சந்திக்க வந்துள்ளனர். இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காக தினகரன் இடைத்தரகர் சுகேஷ் சந்தர் மூலம் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக, தினகரன் மீது குற்றச்சாட்டு உள்ளது. மேலும், டி.டி.வி.தினகரனிடம் இருந்து பணம் வாங்கியதாக சுகேஷ் சந்தர் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

டெல்லி போலீஸ் வந்ததை அடுத்து, தினகரன் வீட்டின் முன்னர் தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்றுள்ளார். தீக்குளிக்க முயன்றவர் பெயர் ரவிச்சந்திரன். அவர் தீக்குளிக்க முயன்றபோது, அருகில் இருந்தவர்கள் அதைத் தடுத்து, போலீஸிடம் அவரை ஒப்படைத்தனர். டெல்லி போலீஸ் வருகை, தொண்டர் தீக்குளிக்க முயற்சி போன்ற சம்பவங்களால் தினகரனின் அடையாறு வீடு பரபரப்பாகக் காணப்படுகிறது.

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close