Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ட்ரம்ப் வெற்றிக்கு நான்தான் காரணம் என்பார்! பன்னீர்செல்வத்தை கலாய்க்கும் ஜெயக்குமார்

'பன்னீர்செல்வத்தின் நிர்பந்தத்தால், சசிகலா குடும்பத்தை விலக்கி வைக்கவில்லை' என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார், 'அமெரிக்காவில் ட்ரம்ப்பின் வெற்றிக்கே நான்தான் காரணம் என்றுகூட பன்னீர்செல்வம் கூறுவார்' என்று சாடினார்.

அ.தி.மு.க-வில் இருந்து சசிகலா குடும்பத்தை ஒதுக்கிவைத்ததாக அறிவித்தது, முதல்வர் பழனிசாமி அணி. சசிகலா, தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கிவைத்துள்ளதை வரவேற்ற பன்னீர்செல்வம், 'நாங்கள் நடத்திய தர்மயுத்தத்துக்குக் கிடைத்த முதல் வெற்றி இது' என்றார்.

இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு அமைச்சர் ஜெயக்குமார் இன்று அளித்த பேட்டியில், 'சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை கட்சியில் இருந்து ஒதுக்கிவைத்தது, அனைவரும் ஒன்றுசேர்ந்து எடுத்த முடிவுதான். தமிழக மக்கள், ஒன்றரைக் கோடி தொண்டர்களின் விருப்பமும் அதுதான். அந்த விருப்பத்தின் அடிப்படையில்தான் முடிவு எடுக்கப்பட்டது.

பன்னீர்செல்வம் சொல்லி எதுவும் செய்யவில்லை. உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமானால், அமெரிக்காவில் ட்ரம்ப்பின் வெற்றிக்கே நான்தான் காரணம் என்றுகூட பன்னீர்செல்வம் கூறுவார். கட்சியின் நலன் கருதி அனைவரும் முடிவு எடுத்து ஒதுக்கிவைத்தோம். பன்னீர்செல்வம் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைப்பதில் எந்தத் தாமதமும் இல்லை' என்று கூறினார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close