Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை! பரபரப்புடன் பன்னீர்செல்வம், முதல்வர் பழனிசாமி வீடுகள்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வீட்டில், அவசர ஆலோசனை நடைபெற்று வருகிறது. கட்சி இணைப்பு, பொதுச்செயலாளர், அமைச்சர் பதவிகள் தொடர்பாக இரு அணிகளும் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகத் தெரிகிறது.  

admk reunion
 

'அ.தி.மு.க-வின் இரு அணிகளும் சேர்வதற்கான பேச்சுவார்த்தைக்குத் தயார்' என்று ஓ.பன்னீர்செல்வம் கடந்த சில நாள்களுக்கு முன்னர் அறிவித்தார். இதையடுத்து, சசிகலா அணியைச் சேர்ந்த அ.தி.மு.க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தனர். ஆனால், சசிகலா குடும்பத்தினரை ஒதுக்கிவைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் நிபந்தனை ஒன்றை முன்வைத்தார். இதுகுறித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் ஆலோசனை நடத்தினர். அதன்பின், டி.டி.வி தினகரன் குடும்பத்தை ஒதுக்கி வைத்துவிட்டதாக அறிவித்தனர். 

admk reunion
 

தற்போது, இரு அணிகளும் தேர்தல் ஆணையத்தால் தற்காலிகமாக முடக்கிவைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க பெயர் மற்றும் இரட்டை இலைச் சின்னத்தை மீட்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர். அதற்கு முன், கட்சி இணைப்பு, பதவிகள் குறித்து இருதரப்பிலும் ஆலோசனை நடைபெற்றுவருகிறது. 

admk reunion
 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் இன்று காலை முதல் மூத்த அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் ஆலோசனை நடத்திவருகின்றனர். அதேபோல சென்னை கிரீன்வேஸில் உள்ள ஓ.பி.எஸ் இல்லத்திலேயும் எம்பி-க்கள் மைத்ரேயன்,ராஜேந்திரன், வனரோஜா, எம்எல்ஏ-க்கள் செம்மலை, ஆறுகுட்டி ஆகியோர் ஆலோசனை நடத்திவருகின்றனர். இதனால், கிரீன்வேஸ் சாலையே பரபரப்பாகக் காணப்படுகிறது. இன்று, பல்வேறு முக்கிய முடிவுகள் அறிவிக்கபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

படங்கள்: கே.ஜெரோம்

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close