Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எது தர்மயுத்தத்தின் வெற்றி? பன்னீர்செல்வத்தை விளாசும் தி.மு.க

'நீதிமன்றத்தில் இரட்டை இலையை மீட்டுவிட்டு, தர்மத்தின் வெற்றி என்கிறாரா?' என்று பன்னீர்செல்வத்தை கலாய்த்துள்ள தி.மு.க செய்தித் தொடர்பாளர், வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஒரு களவாணி இன்னொரு களவாணியை வென்றது எப்படி தர்மயுத்தத்தின் வெற்றியாகும்... என ஆதங்கப்பட்டுள்ளார்.

தி.மு.க செய்தித் தொடர்பாளர், வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணனின் ஃபேஸ்புக் பக்கத்தில், அ.தி.மு.க-வில் நடக்கும் அணிகள் இணைப்பு பற்றி கடுமையாக விமர்சித்திருக்கிறார். அவரது பதிவில், 'தர்மயுத்தத்தின் முதல் வெற்றி என ஓ.பன்னீர்செல்வத்தின் பேச்சை ஊடகங்கள் வாயிலாகக் காண நேர்ந்தது. வழக்கில் சிக்கும்போதெல்லாம், 'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், முடிவில் தர்மமே வெல்லும்' என்பார் ஜெயலலிதா. அவரது வழியில் வந்த பன்னீர்செல்வத்துக்கு, தர்மம் என்றால் என்னவென்று எப்படித் தெரியும்?

ஆங்கிலத்தில் 'சைலன்ட் ப்ரொனவுன்சியேஷன்' என்பார்களே... அப்படித்தான் அவர்கள் அதர்மத்தை, தர்மம் என உச்சரித்துக்கொண்டு இருக்கின்றனர். நீதிமன்றத்தில் இரட்டை இலையை மீட்டுவிட்டு, தர்மத்தின் வெற்றி என்கிறாரா... கச்சத்தீவை மீட்டுவிட்டு தர்மயுத்தத்தின் வெற்றி என்கின்றாரா... விவசாயிகளின் பிரச்னையை கையில் எடுத்து, உச்சநீதிமன்றத்தில் வென்றுவிட்டு தர்மயுத்தத்தின் வெற்றி என்கின்றாரா... மத்திய அரசு நீட் தேர்வை, இந்தியை  திணிக்கின்றதே... அவற்றைத் தடுத்து, சமூகநீதியை நிலைநாட்டிவிட்டு, தர்மயுத்தத்தின் வெற்றி என்கிறாரா? ஒரு களவாணி இன்னொரு களவாணியை வென்றது எப்படி தர்மயுத்தத்தின் வெற்றியாகும். காப்பியங்களிலும் புராணங்களிலும் புனிதமாக உச்சரிக்கப்பட்ட  'தர்மம்' என்ற சொல், இவர்களால் களங்கப்பட்டுள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close