Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆளுநரை சந்தித்தது ஏன்? தம்பிதுரை, ஜெயக்குமார் அடடே விளக்கம்

ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்துப் பேசியது ஏன் என்பது குறித்து தம்பிதுரை, அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளனர்.

தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் அடுத்தடுத்து சந்தித்தனர். இந்த சந்திப்புக்குப் பின்னர் தம்பிதுரை, ஜெயக்குமார் ஆகியோர் தனித்தனியாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

தம்பிதுரை செய்தியாளர்களிடம் கூறுகையில், பழனிசாமி முதல்வராக பதவியேற்கும் போதும் அமைச்சர்கள் பட்டியல் கொடுக்கும்போதும் நான் ஆளுநர் மாளிகைக்கு செல்லவில்லை. நீங்கள் (பத்திரிகையாளர்கள்) தவறான தகவலைத் தரவேண்டாம். ஆளுநர் என்னுடைய நண்பர். அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேனே தவிர அரசியல் ரீதியாக சந்திக்கவில்லை" என்றார்.

அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், "ஜெயலலிதா அரசை பொறுத்தவரை வெளிப்படையான அரசு. துணைவேந்தர்கள், அதுவும் குறிப்பாக என்னுடைய துறையைச் சார்ந்த மீன்வளத்துறை சம்மந்தப்பட்ட துணைவேந்தர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதின் அடிப்படையிலேயே ஆளுநரை சந்தித்தேன். துணைவேந்தர்களை தேர்வு செய்திடும் வகையிலே ஆளுநர் இன்டர்வியூ ஒன்று நடத்தி அதன் அடிப்படையிலேயே நியமனம் செய்யப்படும்.

பல்கலைக்கழகத்தை பொறுத்தவரை ஆளுநர்தான் துணைவேந்தர். அவரே நேரடியாக உட்கார்ந்து சம்மந்தப்பட்ட பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தர்களாக நியமனம் கோருபவர்கள் ஒவ்வொருவராக அழைத்து ஆளுநரே எல்லாவிதமான கேள்விகளையும் கேட்டு நேரிடையாகவே தேர்வு செய்கின்ற வகையிலே இன்று இன்டர்வியூ அமைந்தது. ஒரு மணி நேரம் இந்த இன்டர்வியூ நடந்தது. ஆளுநரை இன்று சந்தித்தது மீன்வளத்துறை அமைச்சர் என்ற அடிப்படையிலேயே. நானும் துணைவேந்தர் என்ற அடிப்படையிலேயே வேந்தரை (ஆளுநர்) சந்தித்தேன். அரசியல் சம்மந்தமான சந்திப்பு கிடையாது.

பன்னீர்செல்வம் அணியுடன் பேசுவதற்காக அமைக்கப்படும் குழு தலைமைக்கழக நிர்வாகிகள், மூத்த அமைச்சர்கள், கட்சியின் முன்னோடிகள் கொண்டதாக இருக்கும். முதலில் யார் யாரை சந்திப்பது முக்கியமில்லை. முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஒரு கருத்தைச் சொல்லி அந்த கருத்தின் அடிப்படையிலேயே அவர்கள் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று சொன்னார்கள். நாங்களும் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று சொன்னோம். அதன்படி நாங்களும் குழு அமைக்கப்படும் என்ற கருத்தை தெரிவித்தோம். அவர்களும் ஒரு குழு அமைக்கப்படும் என்ற கருத்தை தெரிவித்தார்கள்.

குழு அமைத்து அவர்கள் நாள் குறித்து இந்த தேதியில் பேசவேண்டும் என்று எங்களிடம் கேட்டால் நிச்சயம் பேச நாங்கள் தயாராக இருக்கிறோம். ஜனநாயக நாட்டில் யார் எப்படி வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம். அந்த கருத்தெல்லாம் ஏற்புடைய கருத்துக்கிடையாது. அமெரிக்காவில் ட்ரம்ப் என்னால் ஜெயித்தார் என்று நானும் சொல்லிக்கொள்ளலாம், என்னால் ஜெயித்தார் என்று பன்னீர்செல்வமும் சொல்லிக்கொள்ளலாம்" என்று கூறினார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close