Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'குழு அமைச்சுட்டோம், வாங்க பேசலாம்'- ஓபிஎஸ் அணியை அழைக்கும் பழனிசாமி அணி

தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க எம்.பி வைத்திலிங்கம், அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, தங்கமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்தனர். இந்த சந்திப்புக்குப் பிறகு அவர்கள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது வைத்திலிங்கம் கூறுகையில், "சசிகலா, தினகரனை விலகும்படி நாங்கள் வலியுறுத்தினோம். அதை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். பதவிப் பிரமாணத்தில் சசிகலா பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது குறித்த விசாரணை தேர்தல் ஆணையத்தில் உள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக, உயர்நீதிமன்றத்தில் ஒருவர் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நடக்க அரசு தயாராக உள்ளது. 

Edappadi Palanisamy faction


நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம். நாங்கள் எந்த நிபந்தனையும் வைக்கவில்லை. அவர்கள் வைக்கும் நிபந்தனையை நாங்கள் பொருட்படுத்தவில்லை. இரு அணிகள் பேச்சுவார்த்தைக்காக குழு அமைத்துள்ளோம்.  மகிழ்ச்சியுடன் அமர்ந்து பன்னீர்செல்வம் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம்.  இரு அணிகளும் ஒன்றிணைந்து, இரட்டை இலைச் சின்னத்தை மீட்டு சிறப்பான ஆட்சியை நடத்த வேண்டும் என்பதே அனைவரது விருப்பம்" என்றார்.

சி.வி சண்முகம் கூறுகையில், "விருப்பு வெறுப்புகளை தாண்டி, கட்சி மற்றும் ஆட்சி நலனுக்காக இரு அணிகளும் இணைய வேண்டும்" என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close