Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டிஎன்பிஎஸ்சி-க்கு ஐந்து உறுப்பினர்கள் நியமனம்: ரத்துசெய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு!

வழக்கறிஞர்கள் பிரதாப்குமார், சுப்பையா மற்றும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜாராம் உள்ளிட்ட 11 பேரை டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக தமிழக அரசு நியமித்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தி.மு.க, புதிய தமிழகம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. குறிப்பாக, சட்ட விதிகளுக்குப் புறம்பாக அவர்கள் நியமிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

TNPSC


இதையடுத்து, அவர்களை உறுப்பினராக நியமித்த தமிழக அரசின் அரசாணையை, உயர்நீதிமன்றம் ரத்துசெய்தது. இதையடுத்து, உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்துசெய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடுசெய்தது. இதைத்தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிசெய்து, உச்சநீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் தீர்ப்பளித்தது.


இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக ஐந்து பேரை நியமித்து, ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ராஜாராம், கிருஷ்ணகுமார், சுப்பிரமணியம், சுப்பையா, பாலுசாமி ஆகியோரை டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.  இவர்கள் ஐந்து பேரும், ஏற்கெனவே டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு, பின் அவர்களின் நியமனம் ரத்துசெய்யப்பட்டது.

இதற்கிடையே அவர்கள், மீண்டும் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close