Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பன்னீர் அணியின் பயத்துக்கு இது தான் காரணம்!

 

 

 

இரண்டு நாளில் இணைப்பு நடந்துவிடும் என்ற நிலையில் பன்னீர் தரப்பு எழுப்பிய சந்தேகப் பட்டியல்களால் இணைப்புக்கு இடையூறு வந்துவிட்டது.

"'சசிகலாவின் குடும்பத்தைக் கட்சியை விட்டு நீக்க வேண்டும், டெல்லி தேர்தல் ஆணையத்தில் கொடுக்கபட்ட மனுவை திரும்ப பெற வேண்டும்” என  அடுத்தடுத்து நிபந்தனைகளை அடுக்கியுள்ளது பன்னீர்செல்வம் தரப்பு. இரண்டு அணிகள் இணைவது குறித்து பன்னீர்செல்வம் வீட்டில் அவரது அணியின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். சுமார் நான்கு மணி நேரத்துக்கும் மேல் நீடித்த இந்த ஆலோசனைக்குப் பிறகுதான் முனுசாமி செய்தியாளர்களிடம்  பழனிசாமி தரப்புக்கு நெருக்கடி கொடுக்கும் நிபந்தனைகளை அடுக்கினார். 

ஆட்சியில் இருப்பவர்களே இறங்கி வரும் நேரத்தில் பன்னீர் அணியினர் முரண்டு பிடிப்பதற்கு காரணம் என்ன என அந்த அணியின் நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, “இரண்டு நாள்களுக்கு முன் அவர்கள் நடைமுறைக்கும் இப்போதைய நடைமுறைக்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. குறிப்பாக தினகரனை கட்சியை விட்டு ஒதுக்கிவைப்பதாக சொன்னார்களே தவிர சசிகலாவின் குடும்பத்தினரை பற்றி அவர்கள் வாய் திறக்கவே இல்லை. 

அவர்கள் அணியில் இருந்தே எங்களுக்கு வந்த தகவல் தான் அதிர்ச்சியாக இருந்தது. தினகரன் தள்ளிவைப்பின் பின்னணியில் திவாகரன் இருக்கிறார். அவர் தான் அமைச்சர்களிடம்  தினகரனை தள்ளி வையுங்கள் மத்திய அரசின் கோபமும் குறையும் மக்கள் மத்தியில் செல்வாக்கும் வந்துவிடும். ஒ.பி.எஸ் அணியும் இணைந்துவிடுவார்கள். நாங்கள் பின்னால் இருந்தே கட்சியை இயக்குகிறோம் என்று சொல்லியுள்ளார்கள். செய்தியாளர்களை அடிக்கடி சந்திக்கும் அமைச்சர் ஒருவர் இதற்கும் ஓ.கே.சொல்லியுள்ளார். இந்த தகவல்கள் எங்களுக்கு வந்தபிறகு தான் ஒட்டு மொத்த சசிகலா குடும்பத்தையும் கட்சியைவிட்டு நீக்க வேண்டும் என்று  நிபந்தனை விதித்துள்ளோம். ஆனால், அதற்கு அங்கிருந்து எந்த பதிலும் வரவில்லை. நாங்கள் இணைந்துவிடக் கூடாது என்பதில் இரண்டு அமைச்சர்கள் குறியாக இருக்கிறார்கள். பன்னீர்செல்வம் முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு தான் இணைய மறுக்கின்றார் என்று மீடியாவில் செய்தியை கசியவிடுகிறார்கள். 

முன்னால் உறவையும், பின்னால் குழியை நோண்டும் வேலையும் அந்த தரப்பில் சிலர் செய்துவருவதால் தான் நாங்கள் எங்கள் நிபந்தனையை கடுமையாக அவர்களிடமும் மக்களிடமும் சொல்லவேண்டி வந்தது” என்கிறார். இரண்டு நிபந்தனைகளையும் செயல்படுத்தாத வரை இணைப்பு பற்றி பேச்சு இல்லை என்ற முடிவில் பன்னீர் அணியினர் உள்ளார்கள். 

அ.சையது அபுதாஹிர்


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close