Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டி.டி.வி. தினகரன் வழக்கு நிலவரம் : பெங்களூரு அழைத்துச்செல்லப்பட்டார் சுகேஷ்!

இரட்டை இலைச் சின்னத்தை மீட்க, தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக்  கைதுசெய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர், நேற்றிரவு விசாரணைக்காக பெங்களூருக்கு அழைத்துச்செல்லப்பட்டார். 

TTV Dinakaran
 

இரட்டை இலைச் சின்னத்தை மீட்க, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரிடம் கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாக, டி.டி.வி.தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவுசெய்தனர். இந்த வழக்கில்,  கடந்த 16-ம் தேதி டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திரசேகரை டெல்லி போலீஸார் கைதுசெய்தனர்.  அவரிடமிருந்து ஒருகோடியே 30 லட்சம் ரூபாயும், இரண்டு சொகுசு கார்கள் மற்றும் சில ஆவணங்களையும் பறிமுதல்செய்தனர். சுகேஷ் சந்திரசேகரிடம் நடத்திய விசாரணையில், டி.டி.வி.தினகரன் தரப்புதான் இரட்டை இலைச் சின்னத்தை மீட்க, கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார். 

கைதான சுகேஷ் சந்திரசேகர் தரப்பில், டெல்லி தீஸ் ஹசாரி சிறப்பு நீதிமன்றத்தில், கடந்த 19-ம் தேதி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், சுகேஷுக்கு காவல்துறையினர் மன உளைச்சல் அளித்துவருவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.  மேலும், சுகேஷ் போலீஸ் காவலில் வைத்துள்ளதை வீடியோ பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனுவின்  விசாரணை நேற்று நடைபெற்றது. டெல்லி போலீஸ் தரப்பில் அதிகாரி ஒருவர் ஆஜராகி, சுகேஷை டெல்லி போலீசார் விசாரணைக்காக வெளியூருக்கு அழைத்துச் சென்றுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் சுகேஷ் தரப்பில், தினகரன் யாரென்றே தெரியாது என்னும் வாதத்தையும் முன்வைத்துள்ளனர். 

இந்த நிலையில், சுகேஷ் நேற்று இரவு பெங்களூருக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அவருக்கு, பெங்களூருரில் பணம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுவதால், அங்கு அழைத்துச்சென்று விசாரிக்கிறார்கள்.  இதற்கிடையே, டி.டி.வி.தினகரன் நாளை டெல்லி போலீஸில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close